உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று துவக்கம்

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று துவக்கம்

சென்னை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள, வர்த்தக மையத்தில், 'வசந்த் அன் கோ' நிறுவனம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த, வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து, இக்கண்காட்சியை நடத்துகின்றனர். இன்று முதல் 13ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கும்; அனுமதி இலவசம். கண்காட்சியில், அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும், மாதத் தவணை முறையில் வாங்கலாம். சிறப்பு சலுகைகளும், பம்பர் பரிசுகளும் வழங்கப்படும் என, 'வசந்த் அன் கோ' நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை