அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட ஊர்காவல் படை வீரர்
காசிமேடு:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜான், 13. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், நேற்று தன் நண்பர்கள் நான்கு பேருடன், காசிமேடு பகுதியில் கடலில் குளிக்க சென்றார். கடலில் குளித்து கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய ஜான், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.இதை பார்த்த நண்பர்கள், உதவி கோரி கத்தவே, அங்கிருந்த ஊர்காவல் படை வீரரான தினேஷ்குமார், 21, உடனே கடலில் இறங்கி, போராடி சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர், தினேஷ்குமாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.