ஆத்மாலயா அகாடமி நினைவு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
சென்னை, கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஆத்மாலயா அகாடமி' சார்பில், 'சத்குரு சரணம்' என்ற பெயரில் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடந்தது.ஆத்மாலயா அகாடமி நடன பள்ளி நிர்வாகி டாக்டர் பத்மஜா சுரேஷ் குழுவின் பரத நாட்டியத்துடன், விழா துவங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவரது தந்தை, மறைந்த சாக்யார் ராஜன் நினைவு விருது, கலைஞர் ஸ்ரீ கே.என்.கிருஷ்ணா குரூப்புக்கும், டாக்டர் ராஜராம் சாஸ்திரி விருது, வேத கலைஞர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிக்கும், மேலாற்றுார் ஸ்ரீ எஸ்.நடராஜன் நினைவு விருது, நடன கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேஷனுக்கும், ஆத்மாலயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சை வி.பத்மாவுக்கும், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் வழங்கி கவுரவித்தார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், ''கலைஞர்கள் வாயிலாகதான் கலை வாழ்கிறது. குரு-சிஷ்ய உறவு புனிதமானது. எதிர்கால சந்ததியினரும், இதை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.விழாவுக்கான ஏற்பாடுகளை, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமின் சகோதரியும், பரதநாட்டிய கலைஞருமான டாக்டர் பத்மஜா சுரேஷ் செய்திருந்தார்.