மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
21-Apr-2025
புரசைவாக்கம், புரசைவாக்கம், பிரிக்ளின் சாலை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் 'ஹூக்கா' ரெஸ்டாரன்ட் செயல்படுவதாக, தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சோதனை மேற்கொண்டு, ரெஸ்டாரன்ட் நடத்திய மாதவரத்தைச் சேர்ந்த மனோஜ், 52, என்பவரை, இரு நாட்களுக்கு முன் கைது செய்தனர். இரண்டு ஹூக்கா பைப், ஐந்து குடுவைகள், 30 கிலோ புகையிலை கலந்த ஹூக்கா, 5 கிலோ ஹூக்கா மசாலா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். ஹூக்கா வினியோகம் செய்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
21-Apr-2025