உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இது எப்படி இருக்கு கர்ணம் தப்பினால் மரணம்

இது எப்படி இருக்கு கர்ணம் தப்பினால் மரணம்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரி - குன்னத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை 3 கி.மீ., நீளமுடையது .இந்த சாலை முழுதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சேதமான நிலையில் உள்ளது. இந்த பள்ளங்களில் சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கி உள்ளது. இந்த சாலையை கொளத்துார், தாசரி குன்னத்துார் ஆகிய கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில்,செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2016ல் பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலையை தொடர்ந்து ஜல்லிகற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் சென்று வருவதால் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி