உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது

போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது

அரும்பாக்கம், ஜன. 3--அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திலீப், 50; காவலாளி. இவரது மனைவி பார்வதி, 45; வீட்டு வேலை செய்கிறார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான திலீப், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். திலீப்புக்கு அதே பகுதியில், இரண்டாவது மனைவியும் இருப்பதால் இது தொடர்பாகவும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, குடிபோதையில் இருந்த திலீப், மனைவியிடம் தகராறு செய்து, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால், பார்வதியின் வயிற்றை லேசாக கிழித்துள்ளார்.காயமடைந்த பார்வதி, நேற்று காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், திலீப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ