மனைவிக்கு லொகேஷன் அனுப்பி கணவர் துாக்கிட்டு தற்கொலை
வேளச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடை சேர்ந்தவர் பாலு, 36. பெருங்குடியில் குடும்பத்துடன் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.மனைவி மினி, 28. இவர்களுக்கு பிரணவ்,4, என்ற மகன் உள்ளார். கடன் பிரசனையால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதில் மன முடைந்த பாலு, நேற்று மாலை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்ட தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், வீடியோ அழைப்பில், மனைவி மற்றும் மகனிடம் பேசிவிட்டு, துாக்கு போட்ட இடத்தின் லொகேஷனை அனுப்பி, மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார். நண்பர்கள் வழியாக இடத்தை கண்டுபிடித்து, திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.