உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் ரூ.6,000 ஆட்டை

மூதாட்டியிடம் ரூ.6,000 ஆட்டை

சென்னை, கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சுலக்சனா, 55. இவர், கடந்த 8ம் தேதி, தாம்பரத்தில் உள்ள துணிக்கடையில், பேரக்குழந்தைகளுக்கு துணி எடுக்க சென்றார். அப்போது, அவரது பேக்கில் இருந்த, 6,000 ரூபாய் மாயமானது.இது குறித்த புகாரின்படி விசாரித்த தாம்பரம் போலீசார், 'சிசிடிவி' வாயிலாக திருட்டில் ஈடுபட்ட புதுபெருங்களத்துார் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 55, என்பவரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.லட்சுமி மீது, மாம்பலம், குரோம்பேட்டை உட்பட, பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ