உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 408 நவீன ரயில் பெட்டி வழங்க ஐ.சி.எப்., இலக்கு

408 நவீன ரயில் பெட்டி வழங்க ஐ.சி.எப்., இலக்கு

சென்னை: தெற்கு ரயில்வேக்கு 408 எல்.எச்.பி., ரயில் பெட்டிகளை வழங்க ஐ.சி.எப்., இலக்கு நிர்ணயித்துள்ளது. ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையான பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் ஜெர்மன் தொழில் நுட்பத்தில், 'லிங் ஹாப்மென் புஷ்' என்ற நவீன எல்.எச்.பி., ரயில் பெட்டிகள் தயாரித்து வருகிறது. இந்த நிதியாண்டில், 3,000க்கும் மேற்பட்ட எல்.எச்.பி., பெட்டிகளை தயாரித்து, ரயில்வேக்கு வழங்க உள்ளது. இதில், தெற்கு ரயில்வேக்கு மட்டும், 408 எல்.எச்.பி., பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை 290 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பெட்டிகள், வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என, ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ''ராமேஸ்வரம், கொல்லம், திருச்செந்துார் உள்ளிட்ட விரைவு ரயில்களில் இருக்கும் பழைய பெட்டிகளை நீக்கி, எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்ற வேண்டும். கூடுதல் ரயில் பெட்டிகள் வரும்போது, பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில்வேக்கு பரிந்துரை செய்வோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை