உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகரில் விதிமீறல் கட்டடத்திற்கு சீல்

தி.நகரில் விதிமீறல் கட்டடத்திற்கு சீல்

தி.நகர், தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட இரண்டு மாடி கட்டடத்திற்கு நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது. கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு, தி.நகர், சரோஜினி தெருவில், முரளிகிருஷ்ணன் என்பவர் தரைத்தளத்துடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கட்டடம் உள்ளது. 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்கட்டடத்தில், தனியார் வங்கி, மூன்று குடியிருப்புகள், மருந்து கடை உள்ளிட்டவை இயங்கி வந்தன. விதிமீறி கட்டப்பட்ட இக்கட்டடத்திற்கு, 2017ல் இருந்து மாநகராட்சி 'நோட்டீஸ்' கொடுத்து வந்தது. இதுதொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று மண்டல செயற் பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள், கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை