உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் 10 வீரர்கள் பலப்பரீட்சை

ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் 10 வீரர்கள் பலப்பரீட்சை

சென்னை: போரூரில் துவங்கிய, ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டியில், 10 வீரர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சக்தி குரூப் ஆதரவில், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடர், போரூரில் உள்ள ஹோட்டலில் நேற்று துவங்கியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 10 வீரர்கள் மோதி வருகின்றனர். ஒன்பது சுற்றுகள் அடிப்படையில், போட்டிகள் நடக்கின்றன. முதல் நாள் போட்டியை, சுங்க மற்றும் மறைமுக வரிகள் துறையின் உதவி ஆணையர் மனோகரன் துவக்கி வைத்தார். நிகழ்வில், பொதுச் செயலர் ஸ்டீபன், சங்க துணைத் தலைவர் முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ