உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம், பல்லாவரத்தில் 34 மனுவுக்கு உடனடி தீர்வு

தாம்பரம், பல்லாவரத்தில் 34 மனுவுக்கு உடனடி தீர்வு

தாம்பரம், தாம்பரம், பல்லாவரம் பகுதி மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம், தாம்பரத்தில் கோட்ட பொறியாளர் கருப்பசாமி, பல்லாவரம் கோட்ட பொறியாளர் பாரிராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது.பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, ஒவ்வொரு உதவி பொறியியல் பிரிவு அதிகாரிகளும் முகாமில் பங்கேற்றனர்.தாம்பரம் கோட்டத்தில், மொத்தம் 90 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.அதேபோல், பல்லாவரம் கோட்டத்தில், 77 மனுக்கள் பெறப்பட்டு, 9 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.மற்ற மனுக்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ