உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோசடி வழக்கில் மாஜி ஊழியர் கைது

மோசடி வழக்கில் மாஜி ஊழியர் கைது

மோசடி வழக்கில்

'மாஜி' ஊழியர் கைது

சென்னை: சென்னை, கத்தீட்ரல் சாலையில் 'சன்மார் மெட்ரிக்மெட்டல்ஸ் லிமிடெட்' என்ற கெமிக்கல் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருபவர் சுரேஷ், 63. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 2024ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பிரபு, 20, என்பவர், நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டு, 10,000 ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட பிரபுவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ