உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.கே.நகரில் குழாய் உடைந்து சாலையில் கழிவுநீர் தேக்கம்

கே.கே.நகரில் குழாய் உடைந்து சாலையில் கழிவுநீர் தேக்கம்

கே.கே.நகர்:கே.கே.நகர் அழகிரி சாலையில் கழிவுநீர் குழாய் உடைந்ததால், சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர் 136வது வார்டில், அழகிரி சாலை உள்ளது. இச்சாலையின் கீழ் செல்லும் பாதாள சாக்கடை குழாய் சில நாட்களுக்கு முன் உடைந்து, சாலை உள்வாங்கியது. இதையடுத்து, உடைந்த குழாயை சீர் செய்யும் பணியில், குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, கே.கே.நகரில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. குறிப்பாக, பேருந்து சாலையாக உள்ள, ராஜமன்னார் சாலையில் அடுத்தடுத்து மூன்று பாதாள சாக்கடை இயந்திர நுழைவு வாயிலில் இருந்து கழிவுநீர் வழிந்தோடி, சாலையில் தேங்கி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கழிவுநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. மேலும், ராஜமன்னார் சாலையில் தார்ச்சாலை அமைக்க, பழைய சாலை சுரண்டப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் என, அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட பிரச்னைக்கு, அதிகாரிகள் தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !