மேலும் செய்திகள்
மாணவனை வெட்டிய கஞ்சா வியாபாரி கைது
13-Dec-2024
கொடுங்கையூர், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார், 32; வருமான வரித்துறையில் வரி ஆலோசகராக உள்ளார்.இவர் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி, 7 வது தெருவில் புதிதாக வீடு வாங்கிய நிலையில், அதை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தன் இருசக்கர வாகனத்தில், வீட்டின் புதுப்பிக்கும் பணியை பார்வையிட சென்றார்.முதல் மாடிக்கு சென்று வீட்டு வேலை நடப்பதை பார்வையிட்ட பின் கீழே வந்து பார்த்த போது, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பைக்கில் 45,000 ரூபாயும் வைத்திருந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில், சரத்குமார் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
13-Dec-2024