மீன் வரத்து குறைவு விலை உயர்வு
காசிமேடு: சென்னை, காசிமேடு துறைமுகத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில், சென்னை மற்றும் புறநகர்வாசிகள் ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிவர். அதன்படி நேற்றும், அசைவ பிரியர்கள் வந்தனர்.கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 60க்கும் மேற்பட்ட படகுகள், துறைமுகத்திற்கு கரை திரும்பின. படகுகளில் குறைந்த அளவே மீன்வரத்து இருந்ததால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. பொதுமக்கள், பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.