உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுரையீரல் நோய் விழிப்புணர்வு அதிகரிப்பு

நுரையீரல் நோய் விழிப்புணர்வு அதிகரிப்பு

சென்னை, ''கொரோனா தொற்றுக்குப் பின், மக்களிடையே நுரையீரல் தொடர்பான நோய்கள் குறித்த அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது,'' என, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி கூறினார். சென்னையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில், 'அப்பல்லோ செஸ்ட் அப்டேட் 2024' என்ற மாநாடு, சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில், அக்குழுமத்தின் மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி பேசியதாவது:நுரையீரல் நோய்களை கண்டறிதல், பாதிப்பை ஏற்படுத்தும் நிலைகள் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்குப்பின், நுரையீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதை பார்க்க முடிகிறது. இந்த மாநாடு பல்வேறு நிலைகளில் ஆராய்வதுடன், கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழலில், எங்களது சிகிச்சை நடைமுறைகளை மதிப்பீடு செய்ய உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை