உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி முதல் நாளில் இந்திய வீரர்கள் அசத்தல்

ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி முதல் நாளில் இந்திய வீரர்கள் அசத்தல்

சென்னை, ஆசிய 'சர்பிங்' போட்டியின் ஆடவர் ஓபன் தரவரிசை சுற்றில், இந்திய வீரர்கள் வெற்றி பெற்று, அடுத்து சுற்றக்கு முன்னேறினர். ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில், இந்தியா, தமிழ்நாடு சர்பிங் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, நான்காவது, 'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் --- 2025' போட்டியை, சென்னை மாமல்லபுரத்தில் துவக்கியது. போட்டியில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் நாளான நேற்று, 3 - 4 அடி உயர் வரை அலைகள் எழுந்ததால், போட்டி விறுவிறுப்பாக காட்சியளித்தது. ஆடவர் ஓபன் போட்டியில், தரவரிசைக்கான சுற்று நடந்தது. மொத்தம், 16 'ஹூட்'கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு 'ஹூட்'ல் வெற்றி பெறும் இருவர், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுவர். மற்றவர்கள் இரண்டாவது 'ரெப்சேஜ்' சுற்றுகளில் மீண்டும் மோதுவர். அதன்படி, ஹீட் - 3ல் விளையாடிய இந்திய அணியினர் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். அணியின் வீரர் கிஷோர் குமார், 12.17 புள்ளிகள், ஸ்ரீகாந்த், 13.70 புள்ளிகளில் வெற்றி பெற்று, நேரடியாக மூன்றவாது சுற்றுக்கு முன்னேறினர். 'ஹூட் - 1'ல் பிலிப்பைன்ஸின் நீல் சான்செஸ், 14.00 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தார். 'ஹூட் - 4'ல் இந்தோனோசியாவின் மெகா அர்தானா, 16.50 புள்ளிகளில் வெற்றி பெற்றதுடன், தரவரிசை பொட்டியில் அதிகபுள்ளிகளை பெற்று அசத்தினார். இன்று, பெண்கள் ஓபன் சுற்றுகளும், 'யு - 18' மகளிர் முதல் சுற்றும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை