உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி குப்பை கழிவால் தொற்று நோய் அபாயம்

புகார் பெட்டி குப்பை கழிவால் தொற்று நோய் அபாயம்

குப்பை கழிவால் தொற்று நோய் அபாயம்

ஆவடி மாநகராட்சி 40வது வார்டு, வீட்டு வசதி வாரியம் 4வது பிளாக்கில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் எம்.ஜி.ஆர்., நகரில் திறந்தவெளி கால்வாய் செல்கிறது. இதையொட்டி, பல ஆண்டுகளாக பகுதிவாசிகள் குப்பை கொட்டி வருகின்றனர்.குப்பை முறையாக அகற்றப்படாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குப்பை கழிவுகள் திறந்தவெளி கால்வாயில் விழுந்து, அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் பாதிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விக்னேஷ், ஆவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ