உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்., மாற்றம்

காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்., மாற்றம்

சென்னை, திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, முறையாக வழக்கு விசாரணை மேற்கொள்ளாமல், லஞ்சம் பெற்றதாக புகார் வந்ததை அடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறு செய்வதாக புகார் தர வந்த இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல் நிலையங்களில், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் போலீஸ் அதிகாரிகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை