உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுண்ணறிவு காவலர் துாக்கிட்டு தற்கொலை

நுண்ணறிவு காவலர் துாக்கிட்டு தற்கொலை

கோயம்பேடு, விருகம்பாக்கம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் இசக்கி முத்துக்குமார், 38; கோயம்பேடு காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றினார்.இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு இளமாறன், 14, மற்றும் சஞ்சய், 14, ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இசக்கி முத்துக்குமார் நேற்று மதியம் 2:00 மணியளவில், சாப்பிட வீட்டிற்குச் சென்றுள்ளார். மாலை அவரது மூத்த மகன் இளமாறன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, இசக்கி முத்துக்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ