உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச பீச் டென்னிஸ் போட்டி சென்னை வீரர்களுக்கு வெள்ளி

சர்வதேச பீச் டென்னிஸ் போட்டி சென்னை வீரர்களுக்கு வெள்ளி

சென்னை, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சர்வதேச பீச் டென்னிஸ் போட்டி, கடந்த 4 முதல் 6ம் தேதி வரை, ஹாங்காங்கில் நடந்தது. போட்டியில், இந்தியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், பி.டி., - 10, பி.டி., - 50, பி.டி., 100 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.போட்டியில், ஆண்கள் பி.டி., - 50 இரட்டையர் பிரிவில், இந்தியா சார்பில், சென்னை, பட்டாபிராமை சேர்ந்த ஹர்ஷவரதன் மற்றும் ஹரிஷ் மது ஆகியோர் ஜோடி பங்கேற்றனர்.இந்திய ஜோடி, முதல் சுற்றில் இருந்து, காலிறுதி, அரையிறுதி சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், 'டை பிரேக்' வரை சென்ற இந்திய ஜோடி, தாய்லாந்து வீரர்களிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ