மேலும் செய்திகள்
தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்
08-Oct-2025
சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான நேர்காணல், நாளை நடக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். முகவர்களுக்கான தகுதிகள்: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி 18 வயதிற்கு மேல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் செய்வோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. தகுதியுடையோர், சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை பொது அஞ்சலக அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். வரும்போது, மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச் சான்று, முகவரி சான்று மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை, கொண்டு வர வேண்டும். முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர், முகவர்களாக செயல்பட பாதுகாப்பு வைப்புத் தொகை, 5,000 ரூபாய், உரிமக் கட்டணம், 250 ரூபாய் செலுத்த வேண்டும். வசூலிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
08-Oct-2025