உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேட்டி பல்கலை ஊழியர் ஊதியம் குறைப்பு நியாயமற்றது

பேட்டி பல்கலை ஊழியர் ஊதியம் குறைப்பு நியாயமற்றது

சென்னைப் பல்கலை சிண்டிகேட் கூட்டம், இந்த வார இறுதியில் நடக்க உள்ளது. இதில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க, முடிவு எடுக்கப்பட உள்ளது. இம்முடிவு எடுத்தால், அவர்களின் மாத ஊதியம், 10,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை குறைக்கப்படும் என, பல்கலைப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊதியத்தை குறைப்பது தொழிலாளர் விரோதக் கொள்கை; இது நியாயமற்றது. தி.மு.க., அரசின் பணியாளர் விரோத கொள்கை கண்டனத்திற்குரியது. நிதி நெருக்கடியிலிருந்து சென்னைப் பல்கலையை மீட்டெக்க, பல்கலையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். உரிய மானியத்தை வழங்க வேண்டும். முறைகேடுகளை களைய வேண்டும். பணியாளர்கள் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி