உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.7 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் ஹவாலா பணமா என விசாரணை

ரூ.7 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் ஹவாலா பணமா என விசாரணை

சென்னை:சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப் அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசாரின் வாகன சோதனையில், ஆவணங்கள் ஏதுமின்றி, ஏழு லட்சம் ரூபாயுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ேஷக் நுாருதீன், 27 என்பது தெரியவந்தது.'துபாயில் எனக்குத் தெரிந்த இப்ராஹிம் என்பவர் உள்ளார். அவர், என்னிடம், மண்ணடி ஈவினிங் பஜாரில் உள்ள, கடை ஒன்றுக்கு சென்று, பத்து ரூபாய் நோட் ஒன்றில் இருக்கும் எண்களை தெரிவித்தால், ஏழு லட்சம் ரூபாய் தருவார்கள். அந்த ரூபாயை நான் தெரிவிக்கும் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும்' என்று கூறினார். 'அவர் கூறியபடி, பணத்தை வாங்கி வந்து, திருவல்லிக்கேணியில் உள்ள, ஏ.டி.எம்., மையங்கள் வாயிலாக, இப்ராஹிம் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு செலுத்தச் சென்றேன்' என, போலீசாரிடம் கூறியுள்ளார். ேஷக் நுாருதீனிடம் நேற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறுகையில்,'வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார். ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது' என்றார். பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ