மேலும் செய்திகள்
பிடே ஓபன் ரேட்டிங் செஸ் போட்டி துவக்கம்
07-Dec-2024
சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேசப்பெருமான் திருமண மண்டபத்தில், வரும் 12ம் தேதி நடக்கிறது. போட்டியில், 7, 9, 11, 15 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக நடக்கிறது.தவிர, ஓபன் மற்றும் பெண்களுக்கான இரு தனிப்பிரிவுகளிளும் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில்,15வது இடம் வரை பிடிக்கும் சிறுவர்கள்; 10வது இடம் வரை பிடிக்கும் சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ரொக்க பரிசுகள் வழங்கப்படும். போட்டியில், காஞ்சிபுரத்தை சேர்ந்தோர் மட்டுமே பங்கேற்க முடியும். 'பிடே' விதிப்படி, போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், 99942 93081, 950023 4581 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் தெரிவித்துள்ளது.
07-Dec-2024