உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு

ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு

சென்னை; தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில், 30 ஆய்வக தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதில் சேர, மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகள், மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ - மாணவியருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டி.எம்.எல்.டி., என்ற ஆய்வக தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர, பிளஸ் 2ல் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொற்று நோய் மருத்துவமனை அலுவலகத்தில், இன்று முதல் 22ம் தேதி வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து நாட்களிலும், விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை