மகா பெரியவருக்கு கோவில் திருப்பணிக்கு அழைப்பு
சென்னை:மதுரையில், மகா பெரியவர் எனும் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கட்டப்பட உள்ள கோவிலுக்கு, பக்தர்கள் உதவி செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.'மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம்' அமைப்பு சார்பில், காஞ்சி மகா பெரியவர் என அழைக்கப்படும், 'ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் அருகில், புதிய கோவில் கட்டப்பட உள்ளது.இந்த திருப்பணியில், பக்தர்களும் தளவாட பொருட்கள், இதர பொருட்கள் வழங்கலாம். நன்கொடையாக, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் தருவோரின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும்.நன்கொடை விபரங்களுக்கு, 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு கூறினார்.