உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐபோன் மீட்டு கொடுத்த

ஐபோன் மீட்டு கொடுத்த

ராயபுரம்:

ஐபோன் மீட்டு கொடுத்த

ஓட்டுநர்வானகரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் மஜித், 50; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் நேற்று, ஆழ்வார்திருநகர், சிந்தாமணி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஏறி, ராயபுரம் வந்து இறங்கினார். ஆட்டோவில் அவரது ஐபோனை தவறுதலாகவிட்டு சென்றார்.இதை கண்டெடுத்த அப்துல் மஜித், ராயபுரம் போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் சந்திரசேகர், மார்சல் வெங்டேசன் ஆகியோரிடம், ஐபோனை ஒப்படைத்தார்.போலீசார் அதன் உரிமையாளரை வரவழைத்து, ஐபோனை ஒப்படைத்தனர். ஓட்டுநரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

ஐபோன் மீட்டு கொடுத்த

ஓட்டுநர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை