உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச வீட்டுமனை விற்பனையில்... முறைகேடு: பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு

இலவச வீட்டுமனை விற்பனையில்... முறைகேடு: பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு

அரசால் இலவசமாக ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகள், வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் முறைகேடாக, வெவ்வேறு சமூகத்தினருக்கு விற்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக, உரிய பயனாளிகள் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். சென்னை மணலி - கொசப்பூரில், கிராம புல எண், 165/8, 171, 172, 174ல், பழைய காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின், இந்து நாவிதர் சமூகத்தை சேர்ந்த, 343 பேருக்கு, 2.5 சென்ட் இலவச வீட்டுமனைகள், 1994ல் ஒதுக்கப்பட்டன. பயனாளிகளுக்கு, 'நில ஒப்படைப்பு பட்டா' வழங்கப்பட்ட நிலையில், ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.ஒதுக்கீட்டின்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கு, தியாகி விஸ்வநாத தாஸ் நகர் என, பெயர் சூட்டப்பட்டது. அங்கு வசிக்காமல் பல பயனாளிகள் வெளியேறி விட்டதால், அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்து தற்போது, முட்செடிகள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், மனை ஒதுக்கீட்டின் போதே பலர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, இலவச வீட்டுமனைகளை பெற்றுள்ளனர்.https://x.com/dinamalarweb/status/1942078584136561143/photo/1 அங்கு வசிக்காமல் பல பயனாளிகள் வெளியேறி விட்டதால், அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்து தற்போது, முட்செடிகள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், மனை ஒதுக்கீட்டின் போதே பலர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, இலவச வீட்டுமனைகளை பெற்றுள்ளனர்.அதன்படி, ஒதுக்கீடு பெற்ற 343 வீட்டு மனைகளில் தற்போது, 76 வீடுகள் உள்ளன. அதில், 32 பயனாளிகள் மட்டுமே அரசால் முறையான ஒதுக்கீடு பெற்றவர்கள். மீதி உள்ள, 44 வீடுகளில் வசிப்பவர்கள், ஒதுக்கீடு பெற்றவர்களிடம் கிரையம் செய்து இடத்தை வாங்கி, வீடு கட்டி குடியேறியுள்ளனர். தவிர, 267 வீட்டு மனைகள் காலியாகவே உள்ளன.இதன் உரிமையாளர்களும், சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல், வேலுார், துாத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். விதிமுறைகளை மீறி, முறைகேடாக மனைகள் விற்பனைக்கு வருவாய் துறையினரும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த குளறுபடி காரணமாக, உரிய ஆணை பெற்று, 32 ஆண்டுகளாக வசித்து வரும் பயனாளிகளுக்கு, நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான, 'துாய பட்டா' கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. முறையாக, ஒதுக்கீடு பெற்று வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த மனைகளை பயன்படுத்தி, அத்தியாவசிய தேவைக்கு, கல்வி மற்றும் வீட்டுக்கடன் போன்றவற்றை பெறும் வகையில், சிட்டா அடங்கலில் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கொசப்பூரில் ஒதுக்கீட்டின் போதே பலரும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து இடம் பெற்றுள்ளனர். வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறையின் மெத்தனம் காரணமாகவே, இந்த தவறுகள் நிகழ்ந்துள்ளன. இதனால், உரிய பயனாளிகளுக்கு பட்டா கிடைக்காமல் தவிப்பிற்கு ஆளாகியுள்ளோம். - சி.மூர்த்தி, 74, தியாகி விஸ்வநாத தாஸ் நகர், கொசப்பூர், மணலி.கொசப்பூர் தியாகி விஸ்வநாத தாஸ் நகரில்ஆதி திராவிட நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வங்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த துறைக்க ஆவணங்கள் கோரி கடிதம் அனுப்பி இருக்கிறோம். அதுமட்டுமின்றி நேரடியாக சென்று விசாரிக்கும் வகையில் ஊழியர்களை நியமித்துள்ளோம். இதையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். வருவாய் துறை அதிகாரி - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ