ரூ.25 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா?
கொத்தவால்சாவடி, வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய, 25 லட்ச ரூபாய், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கொத்தவால்சாவடி போலீசார், நேற்று முன்தினம் இரவு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பைக்கை, சந்தேகத்தில் மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், அவரிடமிருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, 25 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், பைக்கில் வந்தவர், எம்.கே.பி., நகரைச் சேர்ந்த முஸ்தபா, 40, என்பதும், பாரிமுனையில் உள்ள நண்பர் கடைக்கு பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். இருப்பினும், கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், ஹவாலா பணமாக கருதி, நுங்கபாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம், போலீசார் ஒப்படைத்தனர். **