இஸ்கான் கோடை முகாம் வரும் 28ம் தேதி துவக்கம்
சென்னை, இஸ்கான் சென்னை அமைப்பு சார்பில், கோடை கால சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி துவங்குகிறது. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் வாயிலாக நடத்தப்படும் இந்த முகாமில், 6 - 12 வயது குழந்தைகளும், 13-17 வயது இளைஞர்களும் பங்கேற்கலாம்.இதில், குழந்தைகளுக்கு கதைகள், ஸ்லோகங்கம், வரைகலை, கைவினைப்பயிற்சிகள், நெருப்பில்லா சமையல், விளையாட்டு மற்றும் கீர்த்தனைகள் சொல்லித்தரப்பட உள்ளன. இளைஞர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனை, ஒரு நிமிட கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு மன வரைபடங்கள் சொல்லித்தரப்பட உள்ளன.இதன் வாயிலாக பக்தி, மனதை ஒருமுகப்படுத்துதல், கலாசாரத்தை அறிவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும் என, அவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.இந்த முகாம், வார இறுதி நாட்கள் தவிர்த்து, 10 நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அதிகபட்சம் தினமும் இரண்டு மணி நேரம், குறைந்தபட்ச கட்டணத்தில் நடத்தப்பட உள்ளன.முகாம் குறித்த விவரங்களை, 80725 99295 என்ற எண்ணிலும், www.iskconchennai.org/summercamp என்ற இணையதளத்திலும் அறியலாம். ***