உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

கோடம்பாக்கம்பேட்மின்டன் விளையாடியபோது மயங்கி விழுந்த ஐ.டி., ஊழியர் உயிரிழந்தார்.அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் மோகன், 26. இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 12ம் தேதி இரவு, சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில், நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது மயங்கி விழுந்துள்ளார். நண்பர்களான யோகேஷ் மற்றும் அனீஸ் ஆகியோர், அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி 13ம் தேதி உயிரிழந்தார்.தகவலறிந்த கோடம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை