உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

விபத்தில் ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

துரைப்பாக்கம்:மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் ஜெகதீஷ், 23; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, யமஹா பைக்கில் பெருங்குடி நோக்கி புறப்பட்டார். ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லோடு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.இதை எதிர்பாராத அருண்ஜெகதீஷ் நிலைதடுமாறி அந்த வாகனத்தில் மோதி, வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு வேன் மோதியதில், அருண்ஜெகதீஷ் பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான வேளச்சேரியைச் சேர்ந்த சாமிதுரை, 42, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை