உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண் சாலையாக இருப்பதால் பெரும்பாக்கத்தில் அவதி

மண் சாலையாக இருப்பதால் பெரும்பாக்கத்தில் அவதி

பெரும்பாக்கம், பரங்கிமலை ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில் 12 வார்டுகள் உடையது. வளர்ச்சி அடைந்து வரும் இந்த ஊராட்சியில், முறையான கழிவு நீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.தவிர, சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் சாலையில் இருந்து, பெரும்பாக்கம் பிரதான சாலை மண் தரையாகவே உள்ளது. இதனால், இப்பகுதிவாசி மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.அவர்கள் கூறியதாவது:பெரும்பாக்கத்தில், நடராஜர் நகர் உட்பட மேலும் சில நகர்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக, வீட்டு உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தியும், சாலை வசதி இல்லை.மண் தரையாக இருப்பதால், மழைக்காலத்தில் சகதியாகி, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், இப்பகுதிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் சாலை அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு பகுதிவாசிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி