உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு

புழல், ஆவடி பட்டாபிராமைச் சேர்ந்தவர் 'குள்ள' செந்தில், 48. குற்ற வழக்கு தொடர்பாக பேசின்பாலம் போலீசார் இவரை, கடந்த 14ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம், செந்திலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சக கைதிகள், சிறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே செந்தில் இறந்துள்ளார். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை