உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம், பல்லாவரத்தில் ஜமாபந்தி நாளை துவக்கம்

தாம்பரம், பல்லாவரத்தில் ஜமாபந்தி நாளை துவக்கம்

தாம்பரம் :தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், வருவாய் துறை ரீதியான தீர்வுகளுக்கான ஜமாபந்தி நாளை தொடங்கி, தாம்பரத்தில் மூன்று நாட்களும், பல்லாவரத்தில் இரண்டு நாட்களும் நடக்க உள்ளது.தினமும் காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளது.பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து, பயன்பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தாம்பரம் தாலுகா* மே 14 - புலிகொரடு, கடப்பேரி, தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், பீர்க்கன்காரணை, இரும்புலியூர், திருவஞ்சேரி* 15ம் தேதி - சேலையூர், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், கவுரிவாக்கம், மாடம்பாக்கம், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம், மூலச்சேரி.* 16ம் தேதி - நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல்.பல்லாவரம் தாலுகா* 14ம் தேதி - ஜமீன் பல்லாவரம், அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, கவுல்பஜார், திரிசூலம், புனித தோமையார் மலை* 15ம் தேதி, பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, பொழிச்சலுார்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை