6 தாலுகாக்களில் ஜமாபந்தி 17, 18ம் தேதிகளில் நடக்கிறது
சென்னை :அம்பத்துார், மதுரவாயல், திருவொற்றியூர் உட்பட ஆறு தாலுக்காகளில், வரும் 17, 18ம் தேதிகளில், ஜமாபந்தி முகாம்கள் நடக்கின்றன.திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர், சோழிங்கநல்லுார் மற்றும் ஆலந்துார் ஆகிய தாலுகாக்கள் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.இந்த ஆறு தாலுகா அலுவலகங்களில், வரும் 17, 18ல் காலை 9:00 மணிக்கு, ஜமாபந்தி முகாம் நடக்கிறது.அதன்படி, அம்பத்துாரில் மாவட்ட கலெக்டர்; மதுரவாயல், திருவொற்றியூர், சோழிங்கநல்லுார் வருவாய் கோட்டாட்சியர்கள்; ஆலந்துாரில் மாவட்ட ஆய்வுக்குழும அலுவலர் தலைமையில், முகாம்கள் நடக்கின்றன.மேற்கண்ட பகுதியில் வசிப்போர், தங்களது குறைகள் மற்றும் பட்டா தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.