மேலும் செய்திகள்
23 சவரன் நகைகள் திருட்டு
28-Aug-2025
பரங்கிமலை, வீட்டின் கதவு பூட்டை உடைத்து, ஒரு சவரன் நகை, 30,000 ரூபாய் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிமலை, பஜார் சாலையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 49. தனியார் நிறுவனம் ஒன்றில், மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், குடும்பத்துடன் மணப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு சவரன் தங்க நகை, 30,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகாரின்படி, பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28-Aug-2025