உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜூனியர் டென்னிஸ் கோப்பை 18ல் சென்னையில் துவக்கம்

ஜூனியர் டென்னிஸ் கோப்பை 18ல் சென்னையில் துவக்கம்

சென்னை, ஜூனியர் டென்னிஸ் கோப்பை போட்டிகள், நுங்கம்பாக்கத்தில், இம்மாதம் 18ம் தேதி துவங்குகின்றன. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், 20வது ஜூனியர் டென்னிஸ் கோப்பை போட்டி, நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் அரங்கில், வரும் 18ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடரில், இருபாலரி லும் 18 வயதுக்கு உட்பட்ட தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இருபாலரிலும் பிரதான சுற்றில், தலா 48 வீரர் -- வீராங்கனையர்; இரட்டையரில் பிரதான சுற்றில், தலா 24 வீரர் - வீராங்கனையர் மோத உள்ளனர். தகுதி சுற்று, 16, 17ம் தேதிகளிலும், பிரதான சுற்று, 18 - 23ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி, இரட்டையருக்கு 22, தனிநபருக்கு 23ம் தேதியும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை