உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ள பாதிப்பை தவிர்க்க ரூ.44 கோடியில் கண்மாய்

வெள்ள பாதிப்பை தவிர்க்க ரூ.44 கோடியில் கண்மாய்

பள்ளிக்கரணை:நாராயணபுரம் ஏரி உபரி நீர் சதுப்பு நிலத்தை அடையும் வகையில், நான்கு ஷட்டர்கள் கொண்ட கலங்கலுடன் இரண்டு கண்மாய்கள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அருகில் உள்ள இந்த ஏரி, பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையின் இருபுறமும், 45.5 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், எஸ்.கொளத்துார், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, நன்மங்கலம், பள்ளிக்கரணை அணை ஏரி உட்பட, 14 ஏரிகளின் உபரி நீர், இதில் கலக்கிறது.இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டு, அருகிலுள்ள பகுதிகளில் உட்புகுந்து, ஆண்டுதோறும், 20,000 வீடுகள் பாதிப்படைந்து வந்தன.எனவே, வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், கடந்த 2022ம் ஆண்டு, பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் இடதுபுறம், ஆறு ஷட்டர்கள் கொண்ட கலங்கல் அமைக்கப்பட்டது. இருப்பினும், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து, கடந்தாண்டும் இப்பகுதிகளில் பாதிப்பு இருந்தது.தொடரும் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில், சாலையின் வலது புறத்திலும், நீர் வளத்துறையின் சார்பில், 44 கோடி ரூபாய் மதிப்பில், 4 மீட்டர் அகலம், 2.10 மீட்டர் உயரம், 860 மீட்டர் நீளமுடைய இரு கண்மாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, பணி முடியும் தருவாயில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை