கிருத்திகையால் வெறிச்சோடிய காசிமேடு
காசிமேடு, :ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று, மக்கள் குறைந்தளவில் வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவர். இதனால், அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகம் களைகட்டும்.ஆனால், நேற்று ஆடி கிருத்திகை என்பதால், பெரும்பாலானோர் விரதம் இருந்து முருகனை வழிபடுவது வழக்கம். இதன் எதிரொலியாக, காசிமேடில் மக்கள் குறைந்த அளவே வந்தனர். அதேநேரம், வழக்கத்திற்கு மாறாக, குறைந்தளவு விசைப்படகுகள் தான் நேற்று கரை திரும்பின. மீன் வரத்தும் குறைவாகவே இருக்க, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் களையிழந்து காணப்பட்டது. மீன் விலையும், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருந்தது.மீன் விலை நிலவரம்வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 1,200 - 1,300கறுப்பு வவ்வால் 400 - 500வெள்ளை வவ்வால் 1,000 - 1,200பாறை 300 - 400கடல் விரால் 500 - 600சங்கரா 400 - 500தும்பிலி 300 - 400கானாங்கத்த 200 - 250கடம்பா 300 - 400செருப்பு 250 - 300கிளிச்ச 100 - 150நெத்திலி 100 - 150வாலை 50 - 100இறால் 300 - 400டைகர் இறால் 1,000 - 1,100நண்டு 300 - 400