உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதி தேவை

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதி தேவை

பூந்தமல்லி, பூந்தமல்லி ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. சென்னை புறநகரில் இந்த ஊராட்சி அமைந்துள்ளதால் இங்கு புதிய நகர்கள் உருவாக்கப்பட்டு, வீடுகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.தற்போது, ஆட்கோ நகர், டி.ஆர்.ஆர்.நகர், செந்துார்புரம், அம்மன் நகர், விஜயலட்சுமி நகர், விநாயகபுரம், மேக் நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட 16 நகர் பகுதிகள் அமைந்துள்ளன. இந்த நகர் பகுதியில் சாலை, மழைநீர் வடிகால்வாய் என, போதிய அடிப்படை வசதி இல்லை.பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. குடியிருப்பு அருகே உள்ள காலி நிலத்தில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இங்குள்ள சாலைகளை சீரமைத்து, மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை