உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

சென்னை, அக். 1- கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் கபீர், 24. இவர் மீது, திருச்சூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த மார்ச் மாதம், மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவரை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து அவரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.இந்நிலையில் நிஜாமுதீன் கபீர், நேற்று முன்தினம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு 'ஏர் ஏசியா' விமானத்தில் செல்ல இருந்தார்.அவரின், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கணினி சர்வரில் பரிசோதித்தபோது, நிஜாமுதீன் கபீர், கேரள மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.இதையடுத்து, அவரின் பயணத்தை ரத்து செய்து, அவரை அழைத்து சென்று சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், அவரை கேரளா மாநில போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி