உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது

மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது

காசிமேடு:புதுவண்ணாரப்பேட்டையில் மீனவரை அடித்து கொன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன், 45; மீனவர். இவர், அப்பகுதி பெட்டி கடை அருகே நேற்று மது குடித்த போது, அங்கு வந்த ராகேஷ் என்பவர், 'நாங்கள் வழக்கமாக அமரும் இடத்தில் நீங்கள் ஏன் வந்தீர்கள்' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராகேஷ், கலைவாணனை கையால் தாக்கி, காலால் உதைத்தார். நிலை தடுமாறி கீழே விழுந்த கலைவாணன், பின் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கலைவாணனின் மனைவி தீபா கொடுத்த புகாரின்படி, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, கொலை குற்றமாகாத மரணம் விளைவித்தல் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சம்பவத்தில் ஈடுபட்ட, கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த ராகேஷ், 38, என்பவரை, மீன்பிடி துறைமுகம் ஜீரோ பாலம் அருகே போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ