உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

வியாசர்பாடி: வியாசர்பாடியில், 4 வயது சிறுவனை கடத்திய ரவுடியை, போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடி, ரேணுகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி, 62. இவரது, இரண்டாவது மகளான மகேஸ்வரி, கணவரை பிரிந்த நிலையில், 4 வயது மகனுடன் ஒன்றரை ஆண்டுகளாக எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சரத் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இரு மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் மகேஸ்வரி, துபாயில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார். இதையறிந்த சரத், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, சிறுவன் தர்ஷனை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், மாதவரத்தை அடுத்த மஞ்சம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் சிறுவனை, விட்டுவிட்டு சரத் தப்பியது தெரிய வந்தது. நேற்றிரவு சிறுவனை மீட்ட போலீசார், தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை