மேலும் செய்திகள்
வரும் 26ல் காலாவதியான போலீஸ் வாகனங்கள் ஏலம்
24-Dec-2024
சென்னை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும், கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம், சென்னையில் இரண்டு இடங்களில், வினியோக மையங்களை திறந்து உள்ளது.நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் லிமிடெட், இரண்டு, மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில், தன் டூவீலர்களை, சென்னையில் விற்க வசதியாக, தாம்பரத்தில் வேதா கார்ப்பரேஷன், செங்குன்றத்தில் ஆர்.எம்.இ.வி டெக்னாலஜீஸ் என்ற பெயர்களில், வினியோக மையங்களை நேற்று திறந்துள்ளது. இந்த மையங்களில், 'இ-லுானா, இ-ஜூலு, ஜிங்க்' உள்ளிட்ட வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நிகழ்ச்சியில், கைனடிக் கிரீனின் இரண்டு சக்கர வாகன பிரிவு தலைவர் பங்கஜ் ஷர்மா மற்றும் நிர்வாகிகளான முரளிகிருஷ்ணா, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Dec-2024