உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அவசரமாக தரையிறங்கிய கொல்கட்டா விமானம்

அவசரமாக தரையிறங்கிய கொல்கட்டா விமானம்

சென்னை :பயணிக்கு நெஞ்சுவலி ஏற்படவே, கொல்கட்டா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கட்டாவில் இருந்து, நேற்று அதிகாலை 5:05 மணிக்கு, 170 பயணியருடன் 'இண்டிகோ' விமானம் சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம், காலை 7:25 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வேண்டும். விமானம் நடுவானில் பறந்தபோது, பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலியால் அந்த பயணி துடித்துள்ளார். இது குறித்து, விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவசரத்தை உணர்ந்த விமானி, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்து, முன்னதாகவே விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதை அருகே, ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்ட உடன், மருத்துவ குழுவினர் பயணியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ