உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில குத்துச்சண்டை போட்டி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

மாநில குத்துச்சண்டை போட்டி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சென்னை, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில், நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 650க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், 9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட, 'கப்' பிரிவு உட்பட சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகள் முடிவில், கிருஷ்ணகிரி மாவட்ட அணி, 47 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தென் சென்னை எப்.எஸ்.சி.ஏ., அணி, 40 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், வடசென்னை பி.என்.பி.சி., அணி 27 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை