உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மங்களீஸ்வரர் கோவிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

மங்களீஸ்வரர் கோவிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

அரும்பாக்கம்: அரும்பாக்கம், மங்களீஸ்வரர் கோவிலில், வரும் 11ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அரும்பாக்கத்தில் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மங்களீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேகம்,வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாளையும், நாளை மறுநாள் காலையும், கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, மாலை மூன்றாம் கால விக்னேஷ்வரர் பூஜை நடக்கின்றன. தொடர்ந்து, 11ம் தேதி நான்காம் கால பூஜைகள் துவங்கி, காலை, 10:30 மணிக்கு மூலவர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அன்று மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து திருக்கல்யாணம் சீர்வரிசை; 7:00 மணிக்கு உற்சவமும், 9:30 மணிக்கு திருவீதி உலாவும் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை